விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பேசப் போவதுதான் அத்தனை பேரையும் எகிற வைத்திருக்கிறது. அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
அரசியலுக்கு வருவேன், கட்சி ஆரம்பிப்பேன் என்று முன்பே கூறியிருந்தார் விஜய். அதன்படி கட்சி ஆரம்பித்தார், கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சி நிர்வாகிகளை நியமித்தார். கட்டமைப்பை வலுப்படுத்தினார்.. படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து வந்த விஜய் இதோ இன்று தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் கூட்டி விட்டார்.
பெரிய பெரிய அரசியல் கட்சிகளே சற்று திகிலுடன்தான் விஜய்யின் பாய்ச்சலை பார்த்துக் கொண்டுள்ன. இவர் யாரைப் பாதிக்கப் போகிறார் என்பது ஒரு பக்கம் விவாதமாக மாறியிருந்தாலும் கூட, விஜய் இதுவரை முழுமையாக தனது அரசியல் பேச்சை பேசவில்லை என்பதால் இன்று அவர் பேசப் போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய மாநாட்டில் அவர் 2 மணி நேரம் பேசுவார், 1 மணி நேரம் பேசுவார் என்றெல்லாம் முன்பு செய்திகள் வந்தன. ஆனால் அதிகபட்சம் அவர் 45 நிமிடங்கள் வரையே பேசக் கூடும் என்று தற்போது கூறப்படுகிறது. காரணம், காலை முதலே தொண்டர்கள் வந்து வெயிலில் காத்திருப்பதால் அவர்கள் மாலைக்குள் சோர்வடையக் கூடும் என்பதால் விஜய்யின் பேச்சை சுருக்கமாக அதே சமயம், போதிய அளவிலான நேரத்திலும் அவர் பேசக் கூடும் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை அப்படியே இருந்தாலும் கூட 1 மணி நேரம் வரை விஜய் அதிகபட்சமாக பேசக் கூடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பேச்சை வைத்துத்தான் தவெகவின் எதிர்காலம் இருக்கிறது என்பதால் அவரது பேச்சு எப்படி இருந்தாலும் அதிரடியாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தொண்டர்களுக்கு மிகப் பெரிய அளவில் உற்சாகம் கொடுக்கும் வகையிலும், பொதுமக்களைக் கவரும் வகையிலும் தேவையில்லாத அலங்காரங்கள் இல்லாமல் சிம்பிளாக அதேசமயம், யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
{{comments.comment}}