விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடம் செம டிரெண்டாகி வருகிறது. மேலும் தங்களது அரசியல் வழிகாட்டிகளையும், முக்கியக் கொள்கையையும் இந்தப் பாடல் மூலம் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை வெளியிடப்பட்டது. கட்சியின் மாநாட்ட பாடலுடன், கட்சியின் கொள்கையும் பாடலாக வெளியிடப்பட்டது. திருக்குறள், கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய வரிகளுடன் இந்த கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் மாநாட்டில் இருமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
5 அரசியல் வழிகாட்டிகள்

கட்சியின் கொள்கை பாடலின் மத்தியில் கட்சியின் தலைவரான விஜய்யே பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. அதில், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மா தான் தவெகவின் அரசியல் வழிகாட்டிகள். மதச்சார்பற்ற சம நீதிக் கொள்கை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என கூறுவதாக அமைந்திருந்தது.
கட்சியின் கொள்கை பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெற்றி...வெற்றி...வெற்றி என துவங்குவதாகவும், வெற்றி..வெற்றி என முழக்குவது போலவுமே அமைக்கப்பட்டுள்ளது. இது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தனி நபர் யாரையும் குறிப்பிடாமல், சுதந்திர போராட்ட தியாகிகள், பெரியார், காமராஜர், அம்பேத்கர் என அரசியல் மேதைகளை குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}