விக்கிரவாண்டி: பிரமாண்டக் கூட்டம் கூடும் என்று முன்பே தெரிந்தும் கூட, கட்டுக்கடங்காமல் கூடும் தொண்டர்கள், வெயிலில் அவஸ்தைப்படுவார்கள் என்று தெரிந்தும் கூட தவெக மாநாட்டுத் திடலில் ஏன் பந்தல் போடப்படவில்லை என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ வசதிகள், சிற்றுண்டி வசதி, பிரமாண்ட கார் பார்க்கிங்குகள் உள்பட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் மாநாடு நடைபெறும் திடலிலும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இதுவரை எல்லாம் சரிதான்.. ஆனால் இத்தனை பேர் கூடும் கூட்டத்தில் பிரமாண்ட பந்தலை ஏன் போடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கடுமையான வெயில் தற்போது விக்கிரவாண்டியில் அடித்து வருகிறது. நண்பகல் நிலவரப்படி 33 டிகிரி அளவுக்கு வெயில் வெளுக்கிறது. ஆனால் 37 டிகிரிக்கு சமமான வெப்பத்தை மக்கள் உணர்கிறார்கள். இதனால் பலர் மயக்கமடைந்துள்ளனர். இதனால் மருத்துவக் குழுக்கள் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றனர்.
திறந்தவெளி அரங்கத்தை அமைக்கும் ஐடியாவை யார் கொடுத்தது என்ற குமுறல் எழுந்துள்ளது. இத்தனை பேர் கூடும்போது அவர்கள் சவுகரியமாக அமரத் தேவையானது முதலில் பிரமாண்ட பந்தல்தான். அப்போதுதான் வெயிலின் தாக்கம் இல்லாமல் நிம்மதியாக அமர்ந்திருக்க முடியும். வழக்கமாக இதுபோல மாநாடு நடக்கும்போது பிரமாண்ட பந்தல் போடத் தவற மாட்டார்கள். ஆனார் தவெக மாநாட்டில் ஏன் பந்தல் போடப்படவில்லை என்று தெரியவில்லை.
காலையிலேயே தொண்டர்கள் வந்து அமர்ந்து விட்டார்கள். ஆனால் கடும் வெயில் காரணமாக அவர்களால் உட்காரக் கூட முடியவில்லை. மேலும் பிளாஸ்டிக் சேர்கள் என்பதால் உட்கார்ந்தால் சூடும் உடம்பைத் தாக்கும். நீர்ச்சத்து குறைவு ஒருபக்கம், வியர்த்துக் கொட்டுவது இன்னொரு பக்கம் என தொண்டர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
ஆரம்பத்தில் சேரைத் தூக்கி தலைமேல் வைத்து அமர்ந்து பார்த்தனர். ஆனால் நீண்ட நேரம் அப்படி இருக்க முடியாதே.. இப்போது கீழே விரித்துள்ள கிரீன் மேட்டை கிழித்து அதை தலைக்கு மேல் போட்டுக் கொண்டு அமர ஆரம்பித்துள்ளனர் தொண்டர்கள்.
லட்சக்கணக்கில் செலவு செய்து இத்தனையும் செய்த மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூடவே பந்தலையும் போட்டிருக்கலாம்.. அதை செய்யாமல் விட்டது மிகப் பெரிய தவறாகும். விஜய்யைக் காண வந்த தொண்டர்கள் இப்போது பல்வேறு அவஸ்தைகளை சந்தித்துக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}