சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தவெக கட்சி தலைவர் விஜய் 2 மணி நேரம் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது.இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மாநாடு நடைபெற உள்ளது.
170 அடி நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள், பார்வையாளர்கள் ஆகியோர் அமரும் இடத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றன.இந்த மாநாட்டின் முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்பட்டு வருவது, தவெக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மாநாட்டு வளாகத்தை சுற்றிலும் சுமார் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாநாட்டு திடலின் அருகில் உள்ள கிணறுகள் மரப்பலகைகள் கொண்டு மூடப்பட்டுள்ளன.
நடிகராக இருந்த விஜய் தற்பொழுது அரசியல் வாதியாக இந்த மாநாட்டின் மூலம் மாற உள்ளார். இந்த மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்,மாநாட்டின் சிறப்பு அம்சம் என்ன?. தவெக கட்சியின் கொள்கைகளாக விஜய் என்னென் அறிவிக்கப் போகிறார் என்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
விஜய்யின் முதல் மாநாடு இது என்பதால் இந்த மாநாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டில் தொடக்கத்தில் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடியேற்ற உள்ளார் என்றும்,மாநாட்டின் போது விஜய் 2 மணி நேரம் பேச உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}