சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பேசி அனல் தெறிக்கும் பேச்சிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதியான நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் விஜய் பேசிய பேச்சு அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. முதல் பேச்சிலேயே தைரியமாக அவர் பேசியதாக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
தனது எதிரிகளாக அவர் திமுகவையும், பாஜகவையும் பெயர் குறிப்பிடாமல் அதேசமயம், அனைவருக்கும் புரியும் வகையிலும் பேசியதால், அரசியல் களம் படு சூடாகிக் கிடக்கிறது. விஜய் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு என்ன அர்த்தம்? அவர் யாரை குறிப்பிட்டு பேசினார்? என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் விஜய் பேச்சு குறித்த தங்களின் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
தலைவர்கள் கருத்து :
பாஜக தமிழிசை செளந்தர்ராஜன் - விஜய் பேச்சு சரவெடி அல்ல...புஸ்வானம் தான். கொள்கை எதிரி என்று அவர் எங்களை தான் மறைமுகமாக சொல்கிறார். நாங்கள் பிரிவினை வாதம் பேசவில்லை. தவறான சாயம் பூச வேண்டாம். எம்ஜிஆர், என்டிஆர் போல் விஜய் கிடையாது. உதயாவிற்கு எதிராக உதயமாகி இருக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள். இதே வீரியத்துடன் விஜய் இருக்க வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - விஜய்யின் பேச்சை இன்னும் கேட்கவில்லை. கேட்டுவிட்டு பதில் சொல்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - பாமகவின் 90 சதவீதம் கொள்கைகளைத் தான் விஜய் பேசி இருக்கிறார். பாமகவின் கொள்கையை தான் விஜய் பேசுகிறார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் - விஜய்யை கண்டு யாரும் பயப்பட மாட்டார்கள். எங்கள் கொள்கைக்கு எதிரானது விஜய் கட்சியின் கொள்கை. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல.
திமுக ஆர்.எஸ்.பாரதி - அனைத்து விமர்சனங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி திமுக.,வுக்கு உள்ளது. திமுக., என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும்.
பாஜக எச்.ராஜா - அவரால் திராவிட கட்சிகளின் வாக்குகளை தான் உடைக்க முடியும்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் - எந்த கட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ அதை துணிவோடும், தெளிவோடும் வீரத்துடனும் விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய்யின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
விஜய்யின் பயணம் போகப் போகத்தான் அவரது இலக்கு எதை நோக்கியது, அவரது எதிர்ப்பு யாரைப் பற்றியது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}