சென்னை : அனைவரும் எதிர்பார்த்தது போலவே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடே தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் விஜய் பேச்சிற்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நாம் திரையில், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பார்த்த விஜய்யா இது? என அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு பேசி உள்ளார் விஜய்.
"அரசியலுக்கு தான் குழந்தை தான். அரசியல் பாம்பை கையில் பிடித்து விளையாட பயப்பட போவதும் இல்லை. பின்வாங்க போவதும் இல்லை" ஓப்பனாக சொல்லி விட்டு தான் மாநாட்டு பேச்சையே துவக்கினார் விஜய். ஆனால் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி போல் அனைத்து விமர்சனங்களையும் பட்டியலிட்டு ஒரே மேடையில் பதில் கொடுத்து விட்டார். அதிலும் கட்சி கொடி பற்றி இன்ச், இன்ச்சாக அவர் கொடுத்த விளக்கம், கட்சியின் கொள்கைகள் பற்றி விளக்கி ஒளிபரப்பப்பட்ட ஆடியோ விஷூவல் என அனைத்தும் அனைவரையும் கொஞ்சம் மிரளத்தான் வைத்துள்ளது. தன்னுடைய அரசியல் பாதை எவ்வளவு தெளிவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தி விட்டார் விஜய்.

விஜய்யை காண அவரது ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்பது அனைவருக்கும் தெளியும். ஆனால் இவ்ளவவு பேர் திரண்டு வருவார்கள் என யாரும் எதிர்பார்க்காதது தான். விஜய் திமுக.,வை எதிரி என சொல்லி விட்டதால் திமுக., அதிருப்தியாளர்கள் கண்டிப்பாக விஜய்க்கு ஆதரவாக ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. அதே போல் எம்ஜிஆரை புகழ்ந்து குறிப்பிட்டு பேசியதால் அதிமுக.,வினரின் ஆதரவு கொஞ்சம் விஜய் பக்க திரும்ப வாய்ப்புள்ளது. அதே போல் அதிமுக-திமுக எதிர்ப்பாளர்களின் கவனம் கண்டிப்பாக இனி விஜய் பக்கம் திரும்பும். பாஜக.,வையும் பிரிவினை பேசுபவர்கள் என விஜய் மறைமுகமாக தாக்கி விட்டார்.
திமுக, பாஜக ஆகிய கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் விஜய்க்கு தான் ஆதரவு அளிப்பார்கள். அதே போல் பல காலமாக கட்சி பொறுப்பிற்காக காத்திருந்து, அது கிடைக்காமல் போய் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் திமுக, அதிமுக.,வினரும் விஜய் கட்சிக்கு தாவ வாய்ப்புள்ளது. இளைஞர்கள், திராவிட கட்சிகளின் எதிர்ப்பாளர்கள், அதிருப்தியாளர்கள் ஆகியோரின் ஓட்டுக்கள் தான் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய இலக்காக இருக்கும்.

பிற கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, திமுக, பாஜக.,வில் இருந்து வருபவர்களை விஜய் ஏற்க வாய்ப்பில்லை. அதே சமயம் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக.,வின் முக்கிய தலைகள் தவெக பக்கம் தாவ வாய்ப்புள்ளது. விஜய் பேச்சுக்கு வாழ்த்து தெரிவித்து, தங்களின் கொள்கைகளுடன் ஒத்து போவதாக கூறி பாராட்டி இருப்பதால் பாமக, ஐஜேகே போன்ற கட்சிகளும் விஜய் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலில் பல அதிருப்திகளை வெளிப்படுத்தி, இப்போது சத்தம் காட்டாமல் அமைதியாக இருந்து வரும் காங்கிரசும் கூட விஜய்யின் கூட்டணியை நாடி செய்ய வாய்ப்புள்ளது.
விஜய்யின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விரிவடையும் என்பதால் இந்த கூட்டணி, தாவல்கள், இணைப்புகள் உள்ளிட்டைவ குறித்தும் இனிமேல்தான் நமக்கு கொஞ்சம் புலப்பட ஆரம்பிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}