சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அந்த கட்சியின் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.அத்துடன் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக் கொடி அறிமுகம் செய்ததில் இருந்து அடுத்து அடுத்து பல எதிர்ப்புகளை சந்தித்த வருகிறார். இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தி, அங்கிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்க உள்ளார்.
இந்நிலையில் மாநாட்டை நடத்துவதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் அலுவலகங்களில் மனு அளிக்கப்படிருந்தது.இதற்கு இடையே தவெக மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாகவும், மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்தில் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், 21 கேள்விகள் எழுப்பி, விக்கிரவாண்டி போலீசார் சார்பில் விஜய் கட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கும் பதிலளிக்க விஜய் கட்சிக்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விஜய் கட்சி சார்பில் முறையாக பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிற்கு போலீசாரின் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநாடு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் விளக்கியுள்ளார். விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுணக்கமின்றி பணியாற்றுங்கள், மாநாடு தள்ளிப் போகாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளாராம். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கட்சிக் கொடிகளை தவெக கட்சியினர் தடபுடலாக ஏற்றி மறுபக்கம் தவெக கொடியினை பட்டொளி வீசிப் பறக்க விட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}