சென்னை : தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் நிர்வாகி அதிரடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், சமூக வலைதளங்களில் பரவி வரும் கூட்டணி குறித்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
கடந்த சில நாட்களாக, தவெக கட்சி பாஜக, அதிமுக மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் பரவின. குறிப்பாக, சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் விஜய், என்டிஏ கூட்டணிக்கு வர போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மல் குமார்:

"குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள். பரப்பப்படும் பொய்ச் செய்திகள் குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களிலும் இதேபோன்ற யுக்திகள் கையாளப்பட்டதாகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். பொறுப்புள்ள ஊடகங்களும், சமூக வலைதளப் பயனாளர்களும் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்துடன் அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
2026 தேர்தல் களம் :
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துப் பல யூகங்கள் நிலவி வருகின்றன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த மறுப்பு அறிக்கை, தவெக தனது தனித்துவத்தைப் பேண விரும்புவதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தவெக, என்டிஏ கூட்டணிக்கு செல்கிறது என்ற தகவலை அதிமுக, பாஜக தலைவர்கள் மறுத்து வந்த நிலையில் தற்போது தவெக நிர்வாகிகளும் மறுத்துள்ளனர். அதே போல் என்டிஏ கூட்டணிக்கு தவெக.,வை வரவைப்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசி வருவதாக வெளியான தகவல் பற்றி அவரிடம் கேட்டதற்கு, தான் விஜய்யை சந்தித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக தெரிவித்துள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் தவெக வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.
இந்த முறை தனித்து போட்டியிடவே தவெக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகளும் அதையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டு, அப்போது தவெக.,விடம் கணிசமான எம்எல்ஏ.,க்கள் இருந்தால் அந்த சமயத்தில் விஜய், என்டிஏ.,விற்கு ஆதரவு அளிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது, விஜய் என்டிஏ கூட்டணிக்கு செல்வதாக பரவும் செய்திகள் திமுக.,வால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. என்டிஏ கூட்டணி பலமின்றி இருப்பதால், விஜய்யின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க திமுக திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}