சென்னை: அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் தமிழ் வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி தவெக கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அன்று முதல் இன்று வரை கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். இந்த கட்சியின் முக்கிய நிகழ்வான கட்சி மாநாடு எப்போது நடக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் தமிழ் வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம்!
இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம் வாகை சூடுவோம் என்று தெரிவித்துள்ளார் விஜய். மாநாட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து விஜய் ரசிர்கள் உற்சாகமாகியுள்ளனர். மிகப் பெரிய அளவில் மாநாட்டில் குழுமி புதிய வரலாறு படைக்க இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}