விழுப்புரம்: இங்க யாரும் பைசாவுக்காக வரல. எல்லாம் உணர்வோட வந்து வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம். காசு வாங்கிட்டு வேலை பார்க்குறவங்களுக்கு தான் டைமிங் எல்லாம். டைம் முடிச்சவுடனே போயிடுவாங்க. நேரமாச்சு கிளம்பலாம்னு கிளம்புவாங்க. நாங்க அப்படி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை மருநாள் தவெக கட்சி மாநாடு வெகு பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைத்து தரப்பு மக்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டிற்கு எதிர்பார்பை மீறி அதிகளவில் கூட்டம் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. எந்த கட்சி தலைவர்களும் செய்யாத ராம்ப் வாக் செய்யவுள்ளார் விஜய். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் உள்ள தவெக தொண்டர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்க எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் மாநாடு நடத்துவதாக நினைச்சுட்டு இருங்கீங்க. முதல்ல ரசிகர் மன்றமா இருந்தோம். அப்புறமா நற்பணி மன்றமா மாறி... அதற்கு பிறகு மக்கள் இயக்கமா மாறி... தற்போது தமிழக வெற்றிக்கழக தொண்டனாக மாறி இருக்கோம். இவ்வளவு அனுபவம் இருக்கு. மூத்த கட்சிக்காரர்களுக்கு இருக்குறதவிட அனுபவம் நிறைய எங்களுக்கு இருக்கு.

இங்க யாரும் பைசாவுக்காக வரல. எல்லாம் உணர்வோட வந்து வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம். காசு வாங்கிட்டு வேலை பார்க்குறவங்களுக்கு தான் டைமிங் எல்லாம். டைம் முடுஞ்சவுடனே போயிடுவாங்க. நேரமாச்சு கிளம்பலாம்னு கிளம்புவாங்க. ஆன நாங்க எல்லாம் உணர்வு பூர்வமாக வேலை பாக்குறவங்க. தளபதிய அந்த இடத்தில உட்கார வைக்கனும்னு உணர்வோட வேலை பார்க்கிறோம். எங்களுக்கு சோர்வு கிடையாது. டெய்லியும் தூங்கி எந்திரிச்சா எப்படி இருப்போமா? அதே மாதிரி தான் இருக்கோம். 24 மணி நேரமும் உற்சாகமாக இருக்கோம்.
நார்மலா சொல்லுவாங்க. காச வாங்கிட்டு வந்து வேலை பார்க்கிறோம் என்று. ஆனால், இங்க இருக்கிற எல்லாருமே வேலையை விட்டுட்டு, தொழில விட்டுட்டு, ஒரு மாசமா தன்னோட சொந்த காசுல, தன்னை சேர்ந்தவர்களையும் கூட்டிகிட்டு வந்து உட்கார்ந்து இருக்கோம். இங்கேயே நைட்டு பாய் விறிச்சு படுக்குற நிர்வாகிகளும் இருக்காங்க. தளபதியோட தம்பிகளா நாங்க பெருமைப்படும் விஷயம் என்னன்ன, எல்லா இடத்தியேயும் இருந்து போட்டி போட்டி வந்து வேலை பார்க்கிறாங்க. யாரும் காசை எதிர்பார்க்கல. கேரளா, கர்நாடகத்துல இருந்து எல்லாம் ஆட்கள் வர்றேன்னு சொன்னாங்க. அண்ணன் தான் வேண்டாம் என்று சொல்லிட்டாரு. இந்த கூட்டத்திற்கு வருபவர்களுக்கும் எங்க காசை செலவு பண்ண ரெடியா இருக்கோம்.
எங்க தளபதி மது அருந்தாம வாங்க, டூ விலர்ல வர்றவங்க பாதுகாப்ப வாங்கனு சொல்லி இருக்காரு. கூட்டம் இருக்கோ, இல்லையோ... நீங்க எல்லாம் பாதுகாப்பாக இருக்கனும்னு சொல்லி இருக்காரு. இப்படி சொல்ற ஒரே ஒரு தலைவன் எங்க தளபதி தான். தமிழக வரலாற்றில் தொண்டர்களின் எழுச்சி மிக்க கட்சியா தமிழக வெற்றிக் கழகம் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}