சென்னை: தங்களின் வாழ்வுரிமையை காக்க டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தை தடுத்து, அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக் அரசு நிறுவனத்தில் 25,000 பணியாளர்கள் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதிய தற்காலிக, ஒப்பந்த முறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரத்துக்கு பணிபுரிந்து வருகின்றனர்.
22 ஆண்டுகள் பணிபுரிந்தும், பணி நிரந்தரமோ, பணி விதிகளோ, அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியமோ, அடிப்படை வசதிகள் இன்றி 10 மணி நேரத்துக்கு மேலாக மிகுந்த மன உளைச்சலில் பணிபுரிந்து வருகின்றனர். உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழலில், டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பணி நிரந்தரம், அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், பணி பாதுகாப்பு, இ.எஸ்.ஐ, ஓய்வூதியம், பணி விதிகள், ஏபிசி சுழற்சி முறை, பணி நிரவல் செய்ய வேண்டும். திமுக தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதி எண் 153-ன் படி, 10 ஆண்டுகள் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மதுபான விற்பனையில் கேரளாவில் வழங்குவது போல அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தி மதுக்கூடமின்றி செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் (26.01.2025) சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.
இப்போராட்டத்திற்காக சென்னையை நோக்கி வந்த டாஸ்மாக் ஊழியர்களை, அந்தந்த மாவட்டங்களிலேயே போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுத்து, அவர்களை காவல்துறையின் மூலம், டாஸ்மாக் நிர்வாகம் கைது செய்திருக்கிறது. மேலும், பணியாளர்களை அச்சுறுத்தும் விதமாக மிரட்டும் நடவடிக்கைகளில் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் பாதிக்கப்படுகிற ஊழியர்கள் தங்களின் வாழ்வுரிமைக் காக்க போராடக்கூடாதா? எதிர்க்கட்சியாக இருந்தாலும் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டியது ஜனநாயக உரிமை.
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு, போராட்டங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? வாழ்வுரிமைக் காக்க போராட முயன்ற டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தோழர்களை போராட விடாமல், கைது செய்து விட்டால் அவர்களை முடக்கி விட முடியுமா? இப்படிப்பட்ட போக்கை டாஸ்மாக் நிர்வாகமும், காவல்துறையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல், தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
எனவே, போராட விடாமல் தடுத்து கைது செய்யப்பட்டிருக்கும், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}