சென்னை: தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரானதாகதான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆகஸ்ட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு நடைபெறும் என்றும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் . சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும். கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு தான் முழு அதிகாரம் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து தவெக தலைவர் விஜய் பேசுகையில், கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் கூட்டணி இல்லை. சுயநலத்திற்காக பாஜகவுடன் கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் திமுகவோ, அதிமுகவோ இல்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மதரீதியாக பிளவு படுத்தி அதில் குளிர்காய்கின்ற பாஜகவின் விசமத்தனமான வேலைகள் தமிழ்நாட்டில் இனி எடுபடாது.
தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்பு மிக்க தலைவர்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒரு போதும் வெற்றி பெற முடியாது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக பாஜாவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
முதல் அமைச்சர் பரந்தூர் மக்களை சந்திக்கவில்லை எனில், நானே பரந்தூர் மக்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்வேன். அப்படி ஒரு சூழல் உருவானாலும் அதை எதிர்கொள்ள நான் தயார்.பரந்தூரில் உள்ள 1,500 குடும்பங்களின் நிலை முதலமைச்சருக்கு அவ்வளவு சர்வசாதாரணமாக போய்விட்டதா? என்று கூறியுள்ளார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}