விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், நம் கழகக் கொடியை கைகளில் ஏந்தி வாருங்கள். வி. சாலை எல்லையில் என் இரு கைகளையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன். வி.சாலை என்னும் வியூக சாலையில் சந்திப்போம் என உருக்கமாக கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் கட்சித் தலைவர் விஜய்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் முழு அரசியல்வாதியாகவே களம் காண இருக்கிறார். இதற்காக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்ட திடல் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி,வாகன நிறுத்தம், சிசிடிவி கேமராக்கள், மின்விளக்குகள், உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. தற்போது வரை 90% வேலைகள் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு துவங்கி, இரண்டு மணி நேரம் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தவெகவின் கொள்கை, கொடி குறித்த விளக்கம் போன்றவை தொடர்பாக விஜய் பேச உள்ளார். விஜய் பேச போகும் பேச்சைக் கேட்கவே, விஜய் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், பிற அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இது தவிர விஜயை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் மாநாடுக்கு செல்ல திட்டமிட்டு வருவதால் கூட்டம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. அதேசமயம் மறுபுறம் மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் கூட்டமும் திரளாக கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
விஜய்யின் 3வது கடிதம்
இதற்கிடையே தவெக தலைவர் விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு மாநாடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக இரண்டு முறை தொண்டர்களுக்கு கடிதம் எழுதி எதெல்லாம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியிரு்நதார். 2வது கடிதத்தில், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று தீர்மானமாக தொண்டர்களுக்கு கூறியிருந்தார். இது அனைத்து தரப்பினரிடையே பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கழகத் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் 3வது கடிதம் எழுதி உள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.
வணக்கம்.
நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.
மாநாடு நிகழப்போகும் தருணம் நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை.
அத்திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாடையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.
உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.
வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.
நாம் தமிழ்நாட்டு மண்ணுக்காக வெற்றிக் கொள்கையை செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம்.
2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்.
வி.சாலை என்னும் வியூக சாலையில் சிந்திப்போம். வெற்றி நிச்சயம் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}