விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருபவர்கள் கொடுப்பதற்காக பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில்கள் கொண்ட ஸ்நாக்ஸ் பை தயாரித்து ரெடியாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகமே எதிர் பார்த்து காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும், எல்இடி டிவி, 2 குடிநீர் டேங்குகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் 1, மிக்சர் பாக்கெட் 2 மற்றும் குட்டி தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை ஒரு கேரி பேக்கில் போட்டு கையில் கொடுக்கவுள்ளனர். இதற்காக மதுரையில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமாக தின்பண்டங்கள் பேக் செய்யப்பட்டு விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இதை பேக் செய்துள்ளன்ர. கூடுதலாக தேவைப்பட்டால் தருவதற்காக விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் பேக் செய்யும் பணிகள் நடந்து வருகின்றனவாம்.
மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் கேட்கும் அனைவருக்கும் கொடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. யாரும் பசியுடன் போகக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம். கட்சி சார்பில் தரப்படும் ஸ்நாக்ஸ் தவிர, மாவட்ட கட்சி நிர்வாகங்கள் சார்பிலும் பாக்கெட் போட்டு ஸ்நாக்ஸ் தர ஏற்பாடு செய்துள்ளனராம். பகலில் வெயில் அதிகம் இருப்பதால் பலர் தொண்டர்களுக்கு இலவசமாக தொப்பி தரவும் ஏற்பாடு செய்துள்ளனராம்.
மேலும், மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வர வேண்டாம் என தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது தொடர்பாக கூறப்படுகையில், தொண்டர்கள், பொதுமக்களை பேருந்துகளில் அழைத்து வரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் வரும் வழியில் டாஸ்மாக்கில் வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}