சென்னை: தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 1 எம்பி அதாவது மாநிலங்களவை எம்பி கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் வெற்றியை ஈட்டி உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து நாளை ஆட்சி அமைக்கவும் உள்ளது.
விஜய்யின் இந்த புதிய அரசியல் வருகை தமிழக அரசியல் களத்தை ஏற்கனவே சூடாக்கி உள்ள நிலையில் தற்போது விஜய் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சி தலைவர் விஜயை அவரது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து பேசி ஆதரவு கடிதத்தையும் கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழையும் வாய்ப்பு உருவாகுது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் அவர் சட்டசபை தேர்தலில் மைலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். ஒரு உறுப்பினர் இரு பதவிகளை வகிக்க முடியாது என்பதால் அந்த அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் சி.வி.சண்முகம்.
தற்போது சட்டசபையில் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனவே காலியாகும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதால் மிகக் குறுகிய காலத்தில் சட்டசபை தேர்தலில் வென்றதோடு மாநிலங்களவைக்கும் அதாவது நாடாளுமன்றத்திற்குள்ளும் காலடி வைக்கும் அரிய வாய்ப்பு விஜய் கட்சிக்கு கிடைத்துள்ளது.
ஒரு புதிய கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பிளஸ் நாடாளுமன்றத்தில் ஒரு வெற்றி என்று இதுவரை தமிழக வரலாற்றில் நடந்ததில்லை. அப்படி நடக்கும் போது இது இன்னும் ஒரு சாதனையாக விஜயின் வெற்றி மகுடத்தில் வந்து சேரும்.
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
{{comments.comment}}