கைது செய்யப்பட்ட தவெக மகளிரை விடுவியுங்கள்... விஜய் கோபாவேச அறிக்கை

Mar 08, 2025,06:15 PM IST
சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறவழியில் அடையாளப் போராட்டம் செய்ய மகளிர் மற்றும் கட்சி தொண்டர்களைக் கைது செய்திருப்பதை கண்டிப்பதாக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உலக மகளிர் தினம் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையை கண்டித்து தமிழகம் முழுவதிலும் இன்று தவெக கட்சினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய தவெக கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை எற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.



தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான்  தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால், தமிழ் மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிலையாமை!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

news

மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக

news

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

எங்கே என் .. யாதுமானவன்?

news

விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!

news

தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!

news

தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்