சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்வரி மாதம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்சி குறித்த வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தவெக கட்சியின் மாநாடு வெகு பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு இது நாள் வரை மாவட்ட செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்களுக்கான தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள் தான் இன்று வரைக்கும் தவெகவின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டை 100 மாவட்டங்களாக நிர்வாக ரீதியாக பிரித்து 100 மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளது. தற்போது மாவட்டச் செயலாளர்களை இறுதி செய்யும் பணியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.
சென்னைபனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களிடம் உங்களுக்கு யார் மாவட்ட செயலாளர்களாக வேண்டும். நீங்கள் யாரை மாவட்ட செயலாளர்களாக தேர்வு செய்வீர்கள் என்று கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவை பெறுபவர்கள் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட உள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் தமிழக வெற்றிக் கழக தலைவரிடம் கொடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட பின் அறிவிக்கப்பட உள்ளது. இந்த 100 செயலாளர்களின் பட்டியல் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த செவ்வாய் கிழமை செங்கல்பட்டு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
{{comments.comment}}