சென்னை: எல்லாமே V என்று அமைந்து வருவதால் விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியில் உள்ளனர். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் பெயரிலும், கட்சியின் முதல் மாநாடு நடக்கப் போகும் ஊரின் பெயரும் வி என்று வருவதால் வந்த உற்சாகம் இது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முறைப்படி மனு கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கே கடும் மிரட்டலாக உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் விஜய், எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறார்.. இதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனது இலக்கு. அதற்கு முன்னதாக தான் கமிட்டான படங்களை முடித்துவிட்டு முழு நீள அரசியல்வாதியாக களம் காண இருப்பதாக அறிவித்திருந்தார் இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு, கட்சிக்கொடி என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்.
இந்த நிலையில் தற்போது தவெக கட்சியினரின் கவனம் முதல் மாநில மாநாட்டு பக்கம் திரும்பியுள்ளது. மாநாட்டை எங்கு நடத்துவது எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் ஆறாம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே கட்சி மாநாடு நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கொடியில் மேலும் கீழும் அடர் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறம் இடம்பெற்று இருந்தன. அதேபோல் நடுவில் இரண்டு போர் யானைகளுடன் வாகை மலரும் அமையப் பெற்றது. இதனை பின்னர் இக்கட்சி பாடலையும் வெளியிட்டனர். புரட்சிகரமான இப்பாடல் அனைவரையும் திரும்ப பார்க்க வைத்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை கிராமத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார். இச்செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்து வருகிறது.
இதன் மூலம் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு கோட் படத்திற்கு பின்பே நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}