சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக, பாஜக பெயர்களை உச்சரித்த விஜய், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை முதல் முறையாக குறிப்பிட்டுச் சொன்ன விஜய், அதிமுகவை சற்றுக் கண்டுகொள்ளவில்லை.
தவெக ஆரம்பித்த பிறகு நடந்த முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய் தனது பேச்சின் இறுதியில் ஆட்சிப் பகிர்வு, அதிகாரப்பகிர்வு ஆகியவற்றைக் குறிப்பிட்டு கூட்டணி அமைத்து ஆட்சியமைப்போம் என்று அறிவித்தார். இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்கு இழுக்க விஜய் முயல்வதாக பேச்சு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதை வைத்து பல நாட்களுக்கு பிரச்சினை ஓடியது.
அதன் பிறகு தவெகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு கிளம்பியது. இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவியை தருவதாகவும், குறிப்பிட்ட அளவிலான சீட்களைத் தருவதாகவும் அதிமுக தரப்பு கூறுவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் இதை தவெக தரப்பும், அதிமுக தரப்பும் மறுத்தன.
ஆனாலும் அதிமுக - தவெக இடையே எந்த மோதலும் ஏற்படவில்லை, உரசலும் இல்லை. விஜய் குறித்து அதிமுக தலைவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம் விஜய்க்கு சப்போர்டிவாகவே அவர்கள் பேசி வந்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் முதல் முறையாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் பெயர்களைக் குறிப்பிட்டு கடுமையாக பேசினார். திமுக, பாஜக பெயர்களையும் அவர் உச்சரித்தார். மேலும் முத்தாய்ப்பாக வருகிற தேர்தலில் தவெக, திமுக இடையேதான் போட்டி என்றும் அவர் முழங்கினார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக - அதிமுக என்பதுதான் அரசியல் களமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த இரு கட்சிகளும்தான் மாறி மாறி ஆளுங்கட்சியாக இருந்து வருகின்றன. 1967 முதல் இந்த நிலைதான். இந்த நிலையை முறியடிக்கத்தான் பலரும் முயன்று வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முயன்றார் முடியவில்லை. பாஜக முயன்றது முடியவில்லை. நாம் தமிழர் கட்சி நீண்ட காலமாக முட்டி மோதி வருகிறது. முடியவில்லை. இப்போது விஜய்யும் அதே ஆயுதத்தைத்தான் கையில் எடுத்துள்ளார்.
அதன் வெளிப்பாடாகாவே TVK vs DMK என்று விஜய் கூறியிருப்பதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவை தான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையும் விஜய் உணர்த்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் எதிர்கால அரசியல் தவெக - திமுக இடையேதான் என்பதையும் விஜய் சுட்டிக் காட்டியிருப்பதாகவும் கருதப்படுகிறது.
அதேசமயம், நாம் தமிழர் கட்சி குறித்தும் விஜய் எதுவும் பேசவில்லை. எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்பதால் நாம் தமிழர் கட்சி குறித்து விஜய் ஒரு போதும் பேசுவதில்லை என்று எடுத்துக் கொள்வதில்லை.
விஜய்யின் இன்றைய பேச்சு இதுவரை இல்லாத அளவுக்கு பல செய்திகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. கூடுதல் அனலையும் கக்கியுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}