TVK Vijay.. விக்கிரவாண்டி பேச்சு.. பற்றி எரியும் அரசியல் களம்.. அடுத்த அதிரடிக்குத் தயாராகும் விஜய்

Nov 02, 2024,05:30 PM IST

சென்னை:  விக்கிரவாண்டியில் தான் பேசிய பேச்சை வைத்து அரசியல் களமே ரணகளமாகியுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடிக்குத் தயாராவதாக தெரிகிறது. அதாவது மறைந்த கேப்டன் விஜயகாந்த் பாணியில் தமிழ்நாடு முழுவதும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 27ம் தேதி முதல்  தமிழகம் முழுவதிலும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த அதிரடிகளுக்குத் திட்டம்



கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விஜய், அக்டோபர் 27ம் தேதி ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடித்தியிருந்தார். அந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தார். அத்துடன் பல லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு அரசியல் களத்தில் தீ  மூட்டி விட்டது. அவர் பேசிய கருத்துக்கள் குறித்து இன்றளவும் விவதாங்கள் நடந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஒரு கட்டத்தில் விஜய்க்கு ஆதரவாக இருந்தவர் நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அந்த அளவுக்கு விஜய்யின் பேச்சு அனல் கிளப்பியுள்ளது.

மாநாட்டை தொடர்ந்து 2026ம் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தவெக கட்சி திட்டமிட்டு வருகிறது. எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் போன்றவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விஜய் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து அலோசனை மேற்கொண்டு வருவதாகவும், மாநாட்டின் போது சிறப்பாக செயல்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புக்கள் தர உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

நிர்வாகிகள் நியமனம்

அத்துடன் மாவட்ட, வட்ட, ஒன்றிய, கிளை வரை உள்ள செயலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தல் பணிக்காக இப்போதே ஒரு வாக்குச்சாவடிக்கு 10 பொறுப்பாளர்கள் வீதம் நியமித்து பணிகளை தொடங்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அது மட்டும் இன்றி, தமிழகம் முழுவதிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த சுற்றுப்பயணத்தை டிசம்பர் 27ம் தேதி தொடங்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நாட்கள் தங்க உள்ளதாகவும் தவெக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கினறன. 

இந்த பயண விவர தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோவையில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கி, நெல்லையில் முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டங்களில் 2 நாட்கள் தங்கு போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளாராம். அத்துடன் பொதுமக்களையும் நேரில் சந்தித்து பேசவும் உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் பாணியில்

தேமுதிகவைத் தொடங்கியதும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டியெங்கும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால்தான் தேமுதிகவுக்கு கிராமங்கள் தோறும் நல்ல பலம் கிடைத்தது. கட்சியை மிகப் பெரிய அளவில் பலப்படுத்தவும் அந்த சுற்றுப்பயணம்தான் விஜயகாந்த்துக்கு உதவியது. அவரது சுற்றுப்பயணம் மிகப் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது.

கிட்டத்தட்ட அதே பாணியில் விஜய்யும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களை சந்திக்கவும் இது நல்ல வாய்ப்பாகும். மக்களுக்கு தன்னைப் புரிய வைக்கவும் இது வழி வகுக்கும் என்பதால் தனது ரசிகர்கள், தொண்டர்களைத்  தாண்டி, மக்களை குறிப்பாக பெண்களின் கவனத்தை ஈர்க்க உதவும் என்றும் தவெக தலைமை  கருதுகிறது. எனவே விஜய்யின் இந்த அரசியல் சுற்றுப்பயணம் தவெகவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த உதவும் என்று விஜய்யும் நம்புகிறார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்