திருச்சி : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து, பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் பயணமாக திருச்சி மரக்கடையில் அவர் தனது பிரச்சாரக் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கி, டிசம்பர் 20ம் தேதி மதுரையில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளதாக கூறி, விஜய்யின் முழு பிரச்சார சுற்றுப் பயண விபரங்களும் வெளியிடப்பட்டு விட்டது. செப்டம்பர் 13ம் தேதி விஜய் திருச்சி வரப் போகிறார் என அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் விஜய்யை வரவேற்கும் ஏற்பாடுகளை செய்ய துவங்கி உள்ளனர். இதற்கிடையில் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சில இடங்களை தேர்வு செய்து, அந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய தவெக சார்பில் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில் பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் மரக்கடை பகுதியில் கூட்டத்தை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. முன்னதாக தவெக சார்பில் பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் கேட்கப்பட்டன. ஆனால் குறிப்பிடப்படும் எந்த இடத்திலும் பிரச்சாரம் செய்ய அனுமதி தர போலீசார் மறுத்து விட்டனர். காரணம் மக்கள் அதிகம் புழங்கும் இடம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.
மரக்கடை பகுதியில்தான் பல்வேறு அரசியல் கட்சியினரும் கூட்டங்கள் நடத்தியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட அங்குதான் பேசினார். திமுகவினரின் பல்வேறு போராட்டங்களும் கூட அங்குதான் நடந்துள்ளன. அந்த வகையில் தற்போது விஜய்யும் அங்கு பேசப் போகிறார். ஆனால் இந்த இடத்தில் விஜய் கட்சித் தொண்டர்கள் ஒரு விஷயத்தை முதலில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் ரசிகர்கள் என்ற மன நிலையிலிருந்து தொண்டர்கள் என்ற நிலைக்கு மாற வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அவர்கள் மாறினால் விஜய்க்குத்தான் நல்லது. மாறாமல் ரசிகர்களாகவே இருந்தால் விஜய்க்குத்தான் பாதிப்பு அதிகம்.
கம்பிக் கட்டைத் தாண்டி வரக் கூடாது என்பதற்கா கிரீஸ் தடவியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு ரசிகர்கள்தான் பொறுப்பு. அவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் இதற்கெல்லாம் தேவையே இருந்திருக்காது இல்லையா. அவர்களிடம் கட்டுப்பாடு இல்லை என்பதால்தான் இதையெல்லாம் செய்ய நேரிடுகிறது. இப்படிச் செய்வதால் விஜய்தான் விமர்சனங்களைச் சந்திக்கிறார். மக்கள் மத்தியிலும் அவருக்குத்தான் பாதிப்பு வரும். எனவே ரசிகர்கள் முதலில் தொண்டர்களாக மாறி கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள ஆரம்பித்தால்தான் விஜய்யின் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் அவரது அரசியல் பயணத்தில் தொடர்ந்து அவப் பெயர்களைத்தான் சந்திக்க நேரிடும்.
தற்போது ஒரு நாள் சுற்றுப் பயணம் அல்லாமல், மொத்தமாக 3 மாதங்களுக்கு அடுத்தடுத்த மாவட்டங்களில் விஜய் சுற்றுப் பயணத்தை திட்டமிட்டு, அட்டவணை அறிவித்து விட்டார். அதன்படி சனிக்கிழமை தோறும் அவர் ஒவ்வொரு ஊராகப் பேசப் போகிறார். தவெகவினர் தவிர பொதுமக்களும் கூட விஜய்க்குக் கூடப் போகும் கூட்டம், அவர் பேசப் போகும் விஷயம் ஆகியவற்றை அறிய ஆவலாக காத்துள்ளனர்.
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு கை கொடுக்குமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
{{comments.comment}}