சென்னை: இது கட்சிக் கொடி மட்டுமல்ல, வருங்கால தமிழகத்துக்கான கொடி. இதை கெத்தா, சந்தோஷமா ஏத்திக் கொண்டாடுங்க என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் கட்சித் தலைவர் விஜய் இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை செயலகத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. நடுவே வாகை மலரும், இரு புறமும் யானைகளும் கொடியில் இடம் பெற்றுள்ளன. பார்க்கவே பளிச்சென உள்ளது கொடி.

கொடியை அறிமுகப்படுத்திய விஜய் பின்னர் கொடிக்கம்பத்தில் ஏற்றி வைத்தார். அதன் பின்னர் கட்சியின் தீம் சாங்கையும் அறிமுகப்படுத்தி அதை யும் கட்சியினரோடு சேர்ந்து பார்த்து ரசித்தார். அதன் பிறகு விஜய் பேசினார்.
சிம்பிளாக பேசிய விஜய்யின் பேச்சிலிருந்து: நீங்க அனைவரும் ஆவலோடு என்ன எதிர்பார்த்துட்டு இருக்கீங்கன்னு தெரியும். அதுதான் மாநில மாநாடு. விரைவில் நடக்கப் போகுது. எல்லா ஏற்பாடுகளும் நடந்துட்டிருக்கு. மாநாட்டின்போது இந்தக் கொடிக்கு பின்னால் வரலாறு குறித்தும், அதுகுறித்தும் நான் விளக்கத்தை சொல்வேன். அதுவரை சந்தோஷமா, கெத்தா கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம்.
இது வெறும் கட்சிக்கான கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை. வருங்கால தலைமுறைக்கான, வெற்றிக்கான கொடியாகப் பார்க்கிரேன். உங்க இல்லத்தில் உள்ளத்தில் இதை ஏற்றுவீங்கன்னு எனக்குத் தெரியும். இருப்பினும் முறையான பெர்மிஷன் வாங்கி, ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் பாலோ பண்ணிட்டு, தோழமை பாராட்டி கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். அதுவரை நம்பிக்கையோட இருங்க.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம் என்று கூறினார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!
{{comments.comment}}