TVK கூட்டம்.. தமிழ்நாடு சூறாவளி சுற்றுப்பயணம்.. சீமானுக்கு செக்.. புது டிவி.. விஜய் முக்கிய ஆலோசனை!

Nov 03, 2024,10:12 AM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விவாதிக்கவுள்ளார்.


தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி பிரமாண்டமான முறையில் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இந்த மாநாடு மொத்த அரசியல் களத்தையும் திகுதிகுவென தீப்பிழம்பாக்கி விட்டது. மாநாடு முடிந்து இத்தனை நாட்களாகியும் கூட விஜய் பேசி பேச்சை வைத்து பல அரசியல்வாதிகள் தகித்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக சீமான் கடுமையான டென்ஷனாக காணப்படுகிறார். 


வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லித் திட்டும் அளவுக்கு இறங்கியும் போய் விட்டார். திமுகவாவது முதலில் கடுமையான விமர்சனங்களை வைத்து விட்டு அமைதியாகி விட்டது. ஆனால் சீமான்தான் கடுமையாக கொதித்துக் கொண்டிருக்கிறார். அவரது அடிப்படை பலமான இளைஞர் கூட்டத்தை விஜய் வசீகரித்து விட்டார், மொத்தமாக வாரிக் கொண்டு போகப் போகிறார் என்ற பேச்சுக்கள் பலம் பெற்று வருவதால்தான் சீமான் இப்படி பதட்டமாகியுள்ளதாக பல்வேறு கட்சிகளும் கூறி வருகின்றன.




ஆனால் சீமானின் இந்த அநாகரீக பேச்சுக்கள் குறித்து தவெகவினர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதேசமயம், சீமானுக்கு அரசியல் களத்தில் வைத்து  கடுமையான பதிலடியைக் கொடுக்க கட்சி தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து விஜய் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விஜய் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


1. கட்சியின் மாநில மாநாட்டைத் தொடர்ந்து தொண்டர்களிடம் எழுந்துள்ள எழுச்சி மற்றும் மக்களிடையே எழுந்துள்ள எதிர்பார்ப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். மண்டல வாரியாக அதாவது தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய மண்டலம் என பிரித்து சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.


2. விஜய்யின் சுற்றுப்பயணத்தை மிகப் பெரிய எழுச்சியுடன் நடத்துவது குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் எப்படி இருக்கும், என்னவெல்லாம் விவாதிக்கப்படும், யாரையெல்லாம் விஜய் சந்திப்பார் என்பது குறித்து இன்று நிர்வாகிகளுக்கு விளக்கப்படவுள்ளது.


3. கட்சிக்கென்று சமூக வலைதள பக்கங்கள் ஏற்கனவே வலுவாக உள்ளன. ஐடி விங்கை மேலும் வலுப்படுத்தவும் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாகவும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.


4. தவெகவுக்கு என்று தனியாக ஒரு தொலைக்காட்சியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுதொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


5. கட்சியின் கொள்கைகள் குறித்தும் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாக விளக்கவுள்ளார். அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடவுள்ளார். இடையில் யார் திசை திருப்ப முயன்றாலும் அதைக் கண்டு கொள்ளாதீர்கள். அவர்களை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும் விஜய் விளக்கவுள்ளதாக தெரிகிறது.


6. தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வலுவான, திறமையான பேச்சாளர் படையையும் தவெக உருவாக்கவுள்ளது. ஏற்கனவே உள்ள சிலருடன் மேலும் பல திறமையான பேச்சாளர்களை இணைக்கும் திட்டமும் உள்ளதாம். இதன் மூலம் டிவி விவாதங்களில் தவெகவின் குரல் இனி அழுத்தமாக ஒலிக்கும் என்று கட்சி நம்புகிறது.


இதுதவிர மேலும் சில முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விஜய் விவாதிப்பார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக சீமானுக்கு செக் வைக்கும் விதமான கருத்துக்களையும் கூட அவர் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்கலாம் என்று தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்