என்ன மிஸ்டர் சீமான்.. சாபம்லாம் விடறீங்க.. விஜய் அண்ணனுக்கு ஆதரவாக களம் குதித்த தங்கச்சி விஜயலட்சுமி

Nov 03, 2024,04:25 PM IST

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், நடிகை விஜயலட்சுமி.


நடிகை விஜயலட்சுமி - சீமான் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. இருவருக்கும் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் நீரு பூத்த நெருப்பு போல இருந்துகொண்டே இருக்கிறது.


இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. விஜய்யுடன், பிரண்ட்ஸ் படத்தில் இணைந்து அவரது தங்கை வேடத்தில் நடித்தவர் விஜயலட்சுமி என்பது நினைவிருக்கலாம். விஜயலட்சுமி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் கூறியிருப்பதாவது:




என்ன மிஸ்டர் சீமான்.. சாபம்ல்லாம் விடறீங்க.. நேத்து விஜய் அண்ணனை, ஒன்னு இந்தப் பக்கம் நிக்கனும், இல்லாட்டி அந்தப் பக்கம் நிக்கனும். இல்லாட்டி லாரி அடிச்சு செத்துப் போய்ருவ்னு சாபம்ல்லாம் விட்டிருக்கீங்க. நீங்க மட்டும் உத்தமரா சீமான். உங்க ரூட்டுக்கே வர்றேன். விஜய் அண்ணன் ஆகட்டும், திமுக ஆகட்டும், கொள்கை ரீதியாத்தானே தவறு பண்ணிருக்காங்க. அதையும் நீங்கதான் சொல்றீங்க, மக்கள் சொல்லலை.


அவங்களே லாரி அடிச்சு சாவாங்கன்னா, எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு, நடு ரோட்டில் விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாக மாட்டீங்க மிஸ்டர் சீமான்.  முதல்ல போய் உங்க கட்சி ஓட்டைய அடைங்க. உங்க கட்சிலதான் நிறைய ஊழல் நடக்குதாம். திருச்சி சூர்யா வேற உங்க ஆபாச வீடியோவை வெளியிட்டு உங்க மானத்தை வாங்கப் போறாராம். 


திமுகவுக்கு என்ன செய்யனும்னு திமுகவுக்குத் தெரியும். விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும்னு விஜய் அண்ணனுக்குத் தெரியும். உலகத்திலேயே உங்களுக்கு மட்டுதான் தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையைச் செய்யத் தெரியாமல், காலை எழுந்தா பப்ளிசிட்டி தேடிக்கிட்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலஞ்சிட்டிருக்கீங்க.


பெரிய உத்தமர் மாதிரியும், கண்ணகி மாதிரியும் சாபம் விடாதீங்க. நான்தான் பெங்களூர்ல இருந்து 24 மணி நேரமும் உங்களுக்கு சாபம் விட்டிட்டிருக்கேனே. கொள்கை ரீதியா தவறு செய்றவங்க லாரி அடிச்சு  சாவாங்கன்னா, நீங்க தமிழ்நாட்டு மக்களால செருப்பால் அடிச்சு ஒரு நாள் சாவீங்க என்று கோபாவேசமாக பேசியுள்ளார் விஜயலட்சுமி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்