சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக கட்சிக் கொடியை வெளியிட்டு, அத்துடன் கட்சிப் பாடலையும் அறிமுகப்படுத்தி உள்ளார். கொடி யாரும் எதிர்பாராத வகையில் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு ரசிகர்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் என வலுத்த ஆதரவு நிலவி வந்தது.இதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் விஜய். இக்கட்சி மாநாடு செப்டம்பர் 22ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தவெகவின் கட்சி கொடி குறித்து கட்சித் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் வீரக்கொடியை வெற்றிக் கொடியை நம் கட்சி தலைமை செயலகத்தில் அறிமுகப்படுத்தி கட்சி பாடலை வெளியிடப் போவதாகவும் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 9:15 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இவ்விழாவில் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட 300 பேருக்கு பங்கேற்றனர்.
விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். கட்சியின் பாடல் ஒலித்தபோது தாளம் போட்டபடி கேட்டு பார்த்து ரசித்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். அதைப் பார்த்து ஷோபா சந்தோஷத்தை வெளியிட்டார். புஸ்ஸி ஆனந்த்தைப் பார்த்து தம்ப்ஸ் அப் காட்டி இருவரும் மகிழ்ச்சியும் வெளியிட்டனர்.
கொடியில் என்ன இருக்கு?
இந்த கட்சி கொடியில் மேலும் கீழும் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொடியில் இரண்டு யானைகளுக்கு நடுவில் பச்சை நிறத்தில் 23 நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களுக்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அமையப்பெற்றுள்ளது. விஜய் என்றால் வெற்றி. அதேபோல் வாகை என்றாலும் வெற்றி. எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது உறுதி என்பதைக் குறிக்கவே இக்கட்சி கொடியின் நடுவில் வாகை பூ இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடெங்கும் நமது கொடி பறக்கும்... தமிழ்நாடு இனி சிறக்கும்... வெற்றி நிச்சயம் என்ற கட்சி பாடலை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}