சென்னை: தவெக குறித்து யார் விமர்சனம் செய்தாலும் தனி நபர் விமர்சனம் செய்யாமல், சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் விமர்சிக்குமாறு தனது கட்சியினருக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பனையூரில் இன்று தவெக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டமும், செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை விஜய் வழங்கினார்.
முக்கியமாக, கட்சி குறித்தும், கொள்கை குறித்தும், என்னைப் பற்றியும் யார் விமர்சித்தாலும், அவர்களுக்கு தனி நபர் விமர்சனத்தை தவிர்த்து விட்டு ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என்று விஜய் முக்கியமாக அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டார். வாக்கு சேகரிக்கும்போது பெண் நிர்வாகிகளின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநாட்டில் சொன்னபடி கட்சியின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினாராம்.
கட்சிக் கொடி ஏற்றுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, பூத் கமிட்டிகளில் அதிக பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர 28 தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில், மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி ஒரு தீர்மானம், மாவட்டந்தோறும் காமராசர் அரசு மாதிரிப் பள்ளி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த விஜய், வழக்கம் போல காருக்குள்ளேயே அமர்ந்தபடி உள்ளே செல்லவில்லை. மாறாக கட்சி அலுவலகத்திற்கு வெளியில் காரிலிருந்து இறங்கிய விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து விட்டு பின்னர் உள்ளே சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}