சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன் உதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டாமா? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பைக் காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றிக் கழகம் என்றும் முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும்!
ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, வக்பு என்று ஏற்கனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.
குறிப்பாக, நமது தமிழக வெற்றி கழகத்திற்காக வாதாடிய, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளை கோடிட்டு காட்டியும், மதத் தனி உரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார். மேலும், இந்த திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனி உரிமை சட்டங்களும் நேரடியாக கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக்காட்டினார். எனவே இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கிய பங்காற்றியது என்பதை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் நிலைப்பாடு சார்ந்து உச்சநீதிமன்றத்தில் எதிர்மனுதாரரின் பதிலுக்கு பதில் உரையை நமது தமிழக வெற்றிக்கழகம் தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான வழக்கு விசாரணை நாளை (மே 15) நடைபெற இருக்கிறது. அந்த பதில் உரையில் சிறுபான்மையின மக்களுக்குரிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் விதமாகவும் உள்ள இந்த சட்டம், அடிப்படை உரிமைகள் மேல் கைவைக்கிறது என்ற அபாயத்தை முதன்மையாக கோடிட்டு காட்டியுள்ளோம்.
வக்பு சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் இருந்தபோது, அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், தற்போது புதிய வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு முன் உதாரணமாக முதன்மை நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டாமா?
வக்பு திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமைகள் பறிபோவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று தொடர்ந்து பேசி வரும் திமுக அரசு, செயல் அளவில் அதற்கான நடவடிக்கைகளை எப்போது மேற்கொள்ளும்?
சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள இடது முன்னணி அரசு சட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் மாநில அரசுகளுக்கான உரிமை அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதுபோல், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு தன்னையும் இணைத்துக்கொண்டு வாதங்களை முன்னெடுத்தி, தனியானது ஒரு சட்டப் போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டாமா? அதை ஏன் இன்னும் செய்யவில்லை?
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அடையாளத்திற்கு கடந்து போவதாக இருக்காமல் அரசியலமைப்பு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய காலத்திற்கான அறைகூவலாக இருக்க வேண்டும்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்க அதற்கு எதிராக உள்ள இந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்களிடம் இணைந்து தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் போராடி வருகின்றன. அதேப்போன்று இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசு தார்மீக கடமை!
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காகவும் அரசியலமைப்பை காக்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பிற்காகவும் தமிழக வெற்றி கழகம் என்னும் முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது: முதல்வர் தாக்கு!
விசாரித்தது சிபிஐ.. தீர்ப்பு வழங்கியது.. நீதிமன்றம்.. இதில் ஸ்டாலின் பங்கு என்ன?எடப்பாடி பழனிச்சாமி!
வார இறுதி நாட்கள்: சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
10,11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிட திட்டம்..மே 16ல் வெளியீடு..!
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு.. யாரும் உரிமை கோர முடியாது : விசிக தலைவர் திருமாவளவன்!
பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா.. பத்திரமாக திரும்பினார்
தமிழக அரசு உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
ஐபோன், ஐபேட்டில் பாதுகாப்பு குறைபாடா?...இந்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை
6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட்...காரணம் என்ன தெரியுமா?
{{comments.comment}}