No Looking Back.. ஒரு முடிவோடதான் இறங்கிருக்கேன்.. பின்வாங்க மாட்டேன்.. வி.சாலையில் விஜய் அதிரடி!

Oct 27, 2024,08:50 PM IST

விழுப்புரம் :  அரசியலுக்கு நான் குழந்தை தான். ஆனால் அரசியல் பாம்பை கையில் பிடித்து விளையாடி முடிவு பண்ணி இறங்கிட்டேன் என தன்னுடைய முதல் அரசியல் பேச்சை மாசாக துவக்கினார் விஜய்.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், ஒரு குழந்தை பிறந்த உடன் முதலில் அம்மா என கூப்பிடும் போது அந்த சிலிர்ப்பு, உணவு எப்படி இருக்கும் என்பதை கேட்டால் அம்மாவால் சொல்லி விட முடியும். ஆனால் அந்த குழந்தைக்கு வெள்ளந்திரியாக சிரிக்க தான் தெரியும். அதே குழந்தை முன் சீறும் பாம்பு வந்தாலும் சிரித்த படி கையில் பிடித்து விளையாட துவங்கும். அதே போல் அரசியலுக்கு நான் குழந்தை தான். ஆனால் அரசியல், பாம்பை கையில் பிடித்து விளையாட தயாராகி விட்டேன் என்றார்.




உணர்ச்சிகரமாக பேசுவதில் மேடை பேச்சு முறையை மறந்து விட்டேன் என மேடையில் இருந்தவர்களை அறிமுகம் செய்த விஜய், எதற்காக இந்த அவர்களே...இவர்களே...இங்கு எல்லோரும் சமம் தான். இங்க நாம தான். நீ, நான், அவங்க, இவங்க கிடையாது. இந்த டென்னாலஜி முறையில் அறிவியல், தொழில்நுட்பம் மட்டும் தான் மாறணுமா? அரசியல்ல மாற்றம் வரக் கூடாதா? வரணும். அப்படி ஏற்கனவே இருக்கும் அரசியல் தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க போவதில்லை. சீரியசா பேசுறது எல்லாம் நமக்கு செட் ஆகாது.  பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் இறங்கி அடிக்கணும்.


சொல் முக்கியம் இல்லை. செயல் தான் முக்கியம். வெறுப்பு அரசியலை கையில் எடுக்க போவதில்லை.  அரசியல் கொள்கையை வெளியிட்ட போதே கதறல் சத்தம் கேட்க துவங்கி விட்டது.  நம்முடைய வெற்றியை தீர்மானிப்பதே நம்முடைய எதிரிகள் தான்.


நம்முடைய எதிரிகள் பிரிவினைவாத சக்திகள். மற்றொரு எதிரி ஊழல். மக்களுக்கு நன்றாக தெரியாக யார் ஆட்சிக்கு வர வேண்டும்


மக்களுக்காக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என முடிவு செய்து தான் அரசியலில் இறங்கினேன். மக்களோடு மக்களாக அவர்களுடன் நிற்பது தான் என்னுடைய அரசியல் கொள்கை


நடைமுறையில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை பற்றி தான் நாங்கள் சொல்லுவோம். சும்மா உதாறு விட மாட்டோம். அரசியல் தெளிவு தான் எங்களின் செயல்முறை. எங்க பில்டிங்கும் ஸ்டிராங். பேஸ்மென்ட்டும் ஸ்டிராங் எக்ஸ்ட்ரா லக்கேஜா நான் இங்கே வரல.


பக்கா பிளானோட களம் இறங்கி இருக்கிறோம். நோ லுக்கிங் பேக். ஏ, பி டீம்னு சொல்லி இந்த படையை வீழ்த்தி விடலாம்னு  சாதாரணமாக நினைச்சுராதீங்க.


பாசிசம், பாசிசம்ன்னு சொல்லியே என்ன கலர் பூசினாலும் ஒன்னும் ஆகாது. அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?


திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். இங்க என்ன மோடி மஸ்தான் வேலை காட்டினாலும் நடக்காது. திராடம் எங்களின் எதிரி இல்லை. குடும்பமாக கொள்கையடித்து, மக்களை ஏமாற்றுவதற்காக வந்த கூட்டம் இது இல்லை.


பெண்களுக்கு நிரந்த பாதுகாப்பு தரணும்.


எம்ஜிஆர். என்டிஆர் கட்சி துவங்கியதும் கூத்தாடின்னு தான் கூப்பாடு போட்டாங்க. சினிமா, தமிழர்களின் பண்பாடு. பொழுதுபோக்கிற்கு மட்டும் சினிமா இல்லை.


கூத்தாடின்னா கெட்ட வார்த்தை இல்லை. அது தான் பட்டிதொட்டி எல்லாம் திராவிடத்தை கொண்டு போய் சேர்த்தது. கூத்தாடியின் கோபம் கொந்தளித்தால் யாராலும் தடுக்க முடியாது.


என்னை மாற்றியது நீங்க தான். எங்கிட்ட இருப்பது உண்மை, நேர்மை, உழைப்பு தான்.


அரசியல் களத்திலும் ஓயாமல் உழைப்பேன்.


சினிமா உச்சதை்தை உதறி விட்டு உங்கள் விஜய்யாக...உங்களை நம்பி வந்திருக்கிறேன்.


தமிழகத்தின் வெற்றிக்காக புதிய விதி செய்வோம். நீங்க தான் எனக்கு எல்லாமே. பாத்து பத்திரமாக வீட்டுக்கு போங்க.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்