சென்னை: ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று கூறிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை வலியுறுத்தி அந்தக் கருத்தை திரும்ப வாங்க வைத்து விட்டனர். ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய பெரியாரை மாலை அணிவித்து வணங்கி வருவது ஏன் என்று கேட்டிருந்தார்.
இதுகுறித்து விஜய் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?
குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?!
பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும் என்று கூறியுள்ளார் விஜய்.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா
பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!
{{comments.comment}}