சென்னை : தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13ம் தேதி துவங்கி, தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளதாக அக்கட்சி சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தொடங்கும் சுற்றுப் பயணத்தை, டிசம்பர் 20ம் தேதி மதுரையில் நிறைவு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று விஜய்யின் சுற்றுப் பயணம் குறித்த விபரங்களை தேதிவாரியாக வெளியாகியுள்ளது. விஜய் தனது சுற்றுப்பயணக் கூட்டங்களை சனிக்கிழமைகளில் மட்டுமே மேற்கொள்ளவுள்ளார். இடையில் ஞாயிற்றுக்கிழமை ஒன்றும் இதில் சேர்ந்துள்ளது.
திருச்சியில் தொடங்கி மதுரையில் தனது பிரச்சாரச் சுற்றுப்பயணத்தை முடிக்கவுள்ளார் விஜய். விஜய்யின் பிரச்சாரத் திட்டப் பயணம்:
செப்டம்பர் 13 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
செப்டம்பர் 20 - நாகப்பட்டினம், திருவாரூர். மயிலாடுதுறை
செப்டம்பர் 27 - திருவள்ளூர், வட சென்னை
அக்டோபர் 04, 05 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
அக்டோபர் 11 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
அக்டோபர் 18 - காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
அக்டோபர் 25 - தென் சென்னை, செங்கல்பட்டு
நவம்பர் 01 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
நவம்பர் 08 - திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
நவம்பர் 15 - தென்காசி, விருதுநகர்
நவம்பர் 22 - கடலூர்
நவம்பர் 29 - சிவகங்கை, ராமநாதபுரம்
டிசம்பர் 12 - தஞ்சாவூர், புதுக்கோட்டை
டிசம்பர் 13 - சேலம், நாமக்கல், கரூர்
டிசம்பர் 20 - திண்டுக்கல், தேனி, மதுரை
அது ஏன் சனிக்கிழமை?
விஜய் தனது சுற்றுப்பயணத்தை சனிக்கிழமைகளில் தேர்வு செய்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் விஜய் தரப்பு இந்த கிழமையை தேர்வு செய்ய முக்கியக் காரணம், மிகப் பெரிய அளவில் விஜய்க்குக் கூட்டம் கூடும் என்பதால் ஒர்க்கிங் டே எனப்படும் வேலை நாட்களில் வைத்தால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் இடையூறு ஏற்படும். இதனால் மக்கள் மத்தியில் தனக்கு அவப் பெயர் ஏற்படலாம். மேலும் தனது அரசியல் எதிரிகளால் வேண்டும் என்றே சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதுவே சனி, ஞாயிறு என்றால் பெருமளவிலான மக்கள் வீடுகளில் இருப்பார்கள். எனவே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் கூட்டங்களை நடத்த முடியும் என்பதால்தான் சனி, ஞாயிற்றுக்கிழமையை விஜய் தரப்பு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை இந்த கிழமைகளில் நடத்துவதன் மூலம் மக்களை அதிகம் பாதிக்காமல் இது ஒர்க் அவுட் ஆனால் நாளை இதுவே டிரெண்டும் ஆகக் கூடும். தனது கூட்டங்களில் பேசும்போது விஜய்யே இதைப் பற்றிப் பேசுவார் என்றும் தவெகவினர் கூறுகிறார்கள்.
அதேசமயம், விஜய்யின் இந்த சனிக்கிழமை சுற்றுப்பயணத்தை திமுக, நாம் தமிழர் கட்சியினர் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கிண்டலடித்து டிரோல் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}