சென்னை : அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பேசி வருவதும், கூட்டணிகள் குறித்து பேச்சுவார்த்தைகளும், தமிழக அரசியல் களத்தை விறவிறுப்படைய வைத்துள்ளது. ஆனால் திமுக, அதிமுக.,விற்கு மாற்றும் என்றும், மூன்றாவது அணி என்றும் சொல்லப்படும் தவெக கட்சி தலைவர் விஜய் தற்போது வரை அமைதி காத்து வருகிறாரே என பலரும் பேசி வந்தனர். ஆனால் புதிய திட்டத்துடன் அரசியல் களத்தில் விஜய் தீவிரம் காட்ட தயாராகி வருவதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும், மதுரையில் 2வது மாநில மாநாட்டையும் நடத்தி முடித்து, பெரும் கூட்டத்தை திரட்டி, தனது செல்வாக்கை காட்டி விட்டார் விஜய். அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவல்களின்படி, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் குறித்து பேசி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் விஜய். செப்டம்பர் 10 முதல் 15 வரையிலான தேதிக்குள் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை துவக்க போகிறாராம். தனது அரசியல் பிரச்சார சுற்றுப் பயணத்தை தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கும் திருச்சியில் இருந்து துவக்க போகிறாராம்.
விஜய் நடந்தா மாநாடு.. எனவே ரோடு ஷோ ரத்து!
ஆரம்பத்தில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி ஸ்டைலில் சாலையில் மக்களோடு மக்களாக நடந்து சென்று பிரச்சாரம் செய்யத் தான் விஜய் திட்டமிட்டாராம். ஆனால் மதுரை மாநாட்டில் க்ரீஸ் தடவிய தடுப்பு கம்பிகளையும் தாண்டி ஏறிக் குதித்து வந்து, அவரது ரசிகர்கள் ரேம்ப் வாக்கில் வந்து பரபரப்பை கிளப்பி, ஏற்கனவே அது வழக்கு விவகாரத்தில் போய் கொண்டிருக்கிறது. இனி சாலையில் நடந்தால் என்ன ஆவது? கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பதும் சிக்கலாகி விடும் என பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டதால் திட்டத்தை மாற்றி விட்டாராம் விஜய்.
தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாணியில் பிரச்சார வேனில் சென்று, முக்கியமான ஸ்பாட்டுகளில் நின்று, மக்களிடையே பேச போகிறாராம். முதல் கட்ட சுற்றுப் பயணத்தில் நான்கு முதல் ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் விஜய். பிரச்சாரமும் எடப்பாடி பழனிச்சாமி பாணியில், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அந்தந்த பகுதி மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசி, வாக்காளர்களின் மனங்களை கவரவும் திட்டமிட்டுள்ளாராம் விஜய்.
மழை குறுக்கீடு வருமா!
இது தவெக.,விற்கு பலன் தருமா? அதிமுக.,விற்கு சிக்கலை ஏற்படுத்துமா? எடப்பாடி பழனிச்சாமி பேசும் கூட்டங்களில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் குறுக்கீடு செய்வதாகவும், இது திமுக.,வின் சதி வேலை என்றும் அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு என்னென்ன சவால்கள், இடையூறுகள் காத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதோடு, செப்டம்பர் மாதத்தில் வழக்கை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் வேறு கூறி உள்ளார். மழை குறுக்கிட்டால் விஜய் எப்படி பிரச்சாரம் செய்வார்? மக்கள் எப்படி அவரின் பேச்சை கேட்க கூடுவார்கள்? என்பதும் போக போக தான் தெரியும். ஏற்கனவே பிரச்சாரத்தின் போது விஜய் தங்குவதற்கு ஓட்டல்களில் ரூம் தர ஓட்டல் உரிமையாளர்கள் மறுத்து வருவதாக வேறு ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஷூட்டிங்கிற்கு செல்வது போல் கேரவனிலேயே தங்கி, பிரச்சாரத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அவரது பிரச்சாரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
சென்னையில் மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மைப் பணியாளர்கள்.. கைது
Cricket: ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் அமித் மிஸ்ரா!
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
{{comments.comment}}