தமிழன் கொடி தலைவன் கொடி.. விஜய் வெளியிட்ட.. த.வெ.க. பாட்டுல என்னெல்லாம் இருக்கு பாருங்க..!

Aug 22, 2024,06:53 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பாடல் தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதத்தில் தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்ம கொடி.. தரையின் கொடி.. வீரக்கொடி விஜயக்கொடி.. ஆதி குடியை காக்கும் என பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.  கட்சியினர் மட்டுமல்லாமல் பலரும் ரசிக்கும் வகையில் இது உள்ளது.


தமிழ் மற்றும் தமிழ் தேசியத்தை முழுமையாக விஜய் கையில் எடுத்துள்ளதை இந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.


தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், தோற்றம், பாடுவது என தனக்கென்று தனி அடையாளத்துடன் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தனது நடிப்பின் திறமையால்  தமிழ்நாட்டு  ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மாநில ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.இப்படி இருக்கும் பட்சத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, அக்கட்சிக்கான தீவிர உட்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறார். அதே சமயம் தான் கமிட்டான படங்களை முடித்துவிட்டு, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் முழு அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார்.




இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக கட்சி கொடியை இன்று அறிமுகம் செய்தார் நடிகர் விஜய். அதில் வெற்றியை பறைசாற்றும் விதமாக அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் நடுவே இரண்டு போர் யானைகளுடன் வாகை மலர் இடம்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கட்சி பாடலையும் விஜய் வெளியிட்டார். இந்தப் கட்சி பாடல் இசையமைப்பாளர் தமன் இசையில் , விவேக் வரிகளில்  உருவாகியுள்ளது. இ


இதுதான் அந்தப் பாடல்


தமிழர் கொடி பறக்குது..


தலைவன் யுகம் பொறக்குது மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..


சிருசும் பெருசும் ரசிக்குது.. சிங்கப்பெண்கள் சிரிக்குது.. 

மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது..

மனசில் மக்களவைக்கும் தலைவன் வரும் நேரமிது..

மக்களும் அவன மனசில் வச்சு ஆடி பாடி கூப்பிடுது.. சிகரம் கெடச்ச பின்னும் 

இறங்கி வந்து சேவை செஞ்சு நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது..


தமிழா தமிழா நாம் வாழ போறமே.. ஒரு கறை இல்லாத கைய புடிச்சு போக போறோமே..


தமிழன் கொடி தலைவன் கொடி

தர்ம கொடி 

தரையின் கொடி 

வீரக்கொடி  

விஜய கொடி ஆதிக்குடியை காக்கும் கொடி


ரத்த சிவப்பில் நிறமெடுத்தோம் 

ரெட்டை யானை பலம் கொடுத்தோம்.. 

நரம்பில் ஓடும் தமிழனோட 

தமிழ் உணர்வை உருவிக் கொடியில் உயிர் கொடுத்தோம்.. 

மஞ்சள் எடுத்து அலங்கரித்தோம்..

பச்சை நீல திலகம் வச்சோம்.. 

பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறை அடிச்சோம்.. 

தூரம் நின்னு பார்க்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது.. 

தோளில் வந்து கைய போடும்.. தலைவன் கொடி ஏறுது.. 

அரசர கேள்வி கேட்கும்.. தளபதியின் காலமடி 

அன்னைக்கே சொன்னோமே.. இது ஆளப்போற தமிழன் கொடி..

தலைவன் கொடி.. தர்ம கொடி.. 

தரையின் கொடி.. வீரக்கொடி.. விஜய கொடி.. ஆதிகுடியை காக்கும் குடி


என்ற புரட்சிகரமான வார்த்தைகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜயின் பட பாடலுக்கு எப்படி  வரவேற்பு கிடைத்ததோ அதேபோல விஜயின் கட்சி பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் பாடல் வைரலாகி வருவதுடன் இந்த பாடலைக் கேட்கும்போதே நம்மை அறியாமல் புரட்சி வெளிப்படுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


விஜய்க்காக மெர்சல் படத்தில் ஆளப் போறான் தமிழன் என்ற பாடலை எழுதிய கவிஞர் விவேக்தான் இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். விஜய் பாடல்கள் எப்போதுமே மின்னல் வேகத்தில் ஹிட்டாகும். அதே ரீதியில் இந்தப் பாடலும் ஹிட்டடித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்