தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?

Mar 10, 2026,05:21 PM IST

சென்னை: தவெக கட்சி சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் இன்று நேர்காணம் நடத்தி வருகிறார். கரூர் சம்பவ வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவர் நேர்காணலை நடத்தி வருகிறார்.


சென்னை பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னதாக, 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாகத் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் விஜய் நேரிடையாக இந்த நேர்காணலை நடத்தி வருகிறார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் ஆகியோரும் வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.


இன்று தொடங்கியுள்ள இந்த நேர்காணல் அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முடிவடைந்ததும், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீதமுள்ளவர்களிடமும் விஜய் நேர்காணல் நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.




கரூர் சம்பவ வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ அனுப்பிய சம்மன் தொடர்பாக விஜய் டில்லி சென்று, விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இந்த நிலையில் மார்ச் 10ம் தேதியான இன்றும் நேரில் ஆஜராக மூன்றாவது முறையாக விஜய்க்கு, நேற்று சம்மன் அனுப்பி இருந்தது. இதனால் வேட்பாளர்களைட தேர்வ செய்வதற்கான நேர்காணல் நடத்த முடியாமல் போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நேற்று இரவு அல்லது இன்று காலை விஜய் டில்லி புறப்பட்டு சென்றிருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு செல்லாமல் நேர்காணலில் பங்கேற்று வருவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


விஜய் நேர்காணலில் பங்கேற்று வருவதால், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்கு வழக்கறிஞர் மூலம் கால அவகாசம் கேட்டிருக்கலாம். இதனால் விஜய் மற்றொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்