சென்னை: விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று விருந்து வைத்துள்ளார் கட்சித் தலைவர் விஜய். விருந்திற்கு வந்தவர்களை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் பேசினார். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கை என்ன என்றும், திமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக கூட்டணி ஆட்சிக்கு தயார் என்றும், அத்துடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தெரிவித்திருந்தார்.

இந்த மாநாட்டிற்கு சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. வி சாலை கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை வழங்கியிருந்தனர். அந்த நிலங்களை மாநாட்டிற்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தவெக கட்சி மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜய் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று விருந்திற்கு விவசாயிகள் அவரவர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
விருந்திற்கு வந்தவர்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார். தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}