14 வயது சிறுவனுடன் கார் ஓட்டிப் பழகிய 17 வயது சிறுவன்.. விபத்துக்குள்ளாகி.. 2 பேரும் பலி!

Jun 11, 2024,02:14 PM IST

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை  அருகே  14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு கார் ஓட்ட பழகிய சிறுவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் 17 வயதுடைய  லோகேஷ்சும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய 14 வயது மகன் சுதர்ஷனும் நண்பர்கள்.  இருவரும் பள்ளி செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நேற்று இரவு  லோகேஷ் சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி தனது அப்பாவின் காரை இரவு 11 மணியளவில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.




அப்போது, கார்  கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல்   தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார். அப்பகுதிக்கு வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


சிறுவர்கள் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்