மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை கொல்லும் நோக்குடன் ஏவப்பட்ட 2 டிரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புடினைக் கொல்ல உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தில் புடினுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதேபோல கிரம்ளின் கட்டடத்துக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கிரம்ளின் மாளிகையை நோக்கி 2 டிரோன்கள் பறந்து வந்தன. இதையடுத்து அந்த இரண்டு டிரோன்களையும் ரஷ்ய ஏவுகணைகள் வழிமறித்துத் தாக்கி அழித்து விட்டன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடினைக் கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும், இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மேலும் மோசமடையும் அபாயம் எழுந்துள்ளது.
டிரோன் தாக்குதலின்போது கிரம்ளின் மாளிகையில் புடின் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மிக்கைலோ போடோலியாக் கூறுகையில், இதற்கும் உக்ரைனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிரம்ளின் மாளிகையை உக்ரைன் ஒருபோதும் தாக்காது. இப்படிப்பட்ட தாக்குதல்கள் எந்த வகையிலும் உதவாது என்று உக்ரைன் நம்புகிறது என்றார் அவர்..
கிரம்ளின் மாளிகையை நோக்கி வந்த இரண்டு டிரோன்களில் ஒன்று அதிபர் மாளிகை கோபுரம் மீது பறந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}