அமராவதி: ஆந்திராவில் நடைபெற்ற கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு ரசிகர்கள் வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு நடிகர் ராம்சரண் தலா 5 இலட்சம் இழப்பீடாக வழங்கி உள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் இப்படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கியுள்ள படம் தான் கேம் சேஞ்சர். இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்திலும், ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்துள்ளனர். அதேபோல் எஸ் ஜே சூர்யா வில்லன் ஆகவும் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கதைக்கு இயக்குனர் ஷங்கர் திரைக்கதை அமைத்து உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய தமன் இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் ஒரு பாடலுக்கு மட்டுமே 23 கோடி செலவில் பிரம்மாண்ட செட்டு போட்டு படமாக்கி இருக்கிறார்களாம்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வரும் பத்தாம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 3 திரைப்படத்திற்கு கமிட்டாகி அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என லைக்கா நிறுவனம் புகார் கொடுத்திருந்தது. இந்த புகாரில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்ததால், இயக்குனர் சங்கர் இந்தியன் 3 திரைப்படத்தை முடிக்க மேலும் 65 கோடி கேட்பதாகவும், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என லைக்கா நிறுவனம் அதில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. தற்போது இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் அமெரிக்காவில் இருப்பதால் அவர் வந்த பிறகு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் திட்டமிட்டபடியே வரும் பத்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் நேற்று கேம் சேஞ்சர் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சங்கர், ராம்சரண், மற்றும் படக் குழுவினர் என அனைவரும் கலந்து கொண்டனர். அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று இருந்தார். ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது சாலை விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காக்கிநாடாவை சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகியோர் சிக்கி கொண்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் ராம் சரண் தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளார்.
கடந்த வருடம்தான் தீபாவளியன்று திரைக்கு வந்த புஷ்பா 2 பட முதல் காட்சியின்போது ஹைதராபாத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ரசிகை பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ஆந்திராவில் 2 ரசிகர்கள் பலியாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!
திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி
நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!
Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!
{{comments.comment}}