சென்னை: இரண்டு மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் உருவான படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கண்கள் மற்றும் கேலண்டர் பாடல்கள் சோசியல் மீடியா முழுவதும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த இரண்டு பாடல்களும் youtube இணையதளத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதாம். இதனால் ரசிகர்கள் இதனை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அதை விட முக்கியம் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன் வைரமுத்து. தனது இரு பாடல்கள் ஒரு சேர உச்சத்தில் இருப்பதால் கபிலன் வைரமுத்துவும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், அன்பாலும் ரசிகர்களை கட்டிப்போடும் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் கோட் படம் மற்றும் அடுத்து வரப்போகும் படத்துடன் சினிமா வாழ்க்கைக்கு முழுக்குப்போட உள்ளார். ஏனெனில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அதற்கான மேம்பாட்டுப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் வெளியிட்டிற்க்காக மிகவும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்களையும் திருப்தி படுத்த அவ்வப்போது கோட் படத்தின் அப்டேட்டுகளையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சின்ன சின்ன கண்கள் என்ற இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப் பாடலில் ஏ ஐ என சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு மூலம் மறைந்த பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது.

நடிகர் விஜயின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் பவதாரணி மற்றும் விஜய் குரலில் இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. ஏனெனில் தொடர்ந்து ராப் போன்ற பாடல்களை கேட்டு கேட்டு, தற்போது 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தது போல் மனதை வருடக்கூடிய, இதமான பாடல் என்று சின்ன சின்ன கண்கள் பாடலை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய ஞாபகங்களை நினைவுபடுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
இந்தியன் 2 படம்:
கடந்த 28 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்த இந்தியன் படம் மக்களிடையே பேராதரவை பெற்றது. இப்படத்தை இன்று பார்த்தால் கூட சலிக்கவே சலிக்காது.அந்த அளவிற்கு இப்படத்தின் கதைக்களம், வசனம், கமலுடைய மேக்கப் நடிப்பு போன்றவை பட்டைய கிளப்பியது. அதேபோல் தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்தியன் படத்தைப் போன்றே இப்படமும் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என ரசிகர்களிடையே எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று அனிருத் இசையில் இந்தியன் 2 படத்தில் கேலண்டர் என்ற பாடல் வெளியானது. இதில் முன்னாள் அழகி டெமி நடனமாடி இருக்கிறார். இப்பாடல் வெளியாகி தற்போது சோசியல் மீடியா முழுவதும் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறது. பாடலை படமாக்கப்பட்ட விதம் சும்மா மாஸ் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் சின்ன சின்ன கண்கள் பாடலும், அனிருத் இசையில் கேலண்டர் பாடலும் youtube இணைய தளத்தில் உலக அளவில் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் சோசியல் மீடியாவில் இந்த இரண்டு பாடல்களும் முதல் இரண்டு இடத்தை பிடித்து வைரலாகி வருகிறதாம்.
எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்து தான் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர். இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் வசனமும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}