டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் வர வர ரொம்ப மோசமாக நடந்து கொள்கின்றனர் சிலர். ரீல்ஸ் எடுப்பதற்காக வரம்பு மீறி நடந்து கொள்ளும் இவர்களால் ரயிலில் பயணிக்கும் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் இயல்பான முறையில் பயணிகள் நடந்து வரும் நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் மட்டும் பல அத்துமீறலான சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
முகம் சுளிக்க வைக்கும் ஆபாச செயல்கள் அதிக அளவில் இங்கு நடைபெறுகின்றன. அரைகுறை உடையுடன் பயணித்து பரபரப்பை ஏற்படுத்துவது, ரயிலுக்குள் டான்ஸ் ஆடுவது என்று பலரும் முகம் சுளிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள், ஹோலி பண்டிகையை ரயிலுக்குள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

கலர் பொடிகளை உடம்பு முழுக்க பூசிக் கொண்டு இரு பெண்களும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு கசமுசா பாடலுக்கு மூவ்மென்ட் கொடுத்துள்ளனர். முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டும், மடியில் கிடத்தியும், அணைத்துக் கொண்டும் இவர்கள் செய்த செயல் ரயிலில் பயணித்தோரை அதிருப்திக்குள்ளாக்கியது.
இதையெல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா.. மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏன் இப்படிப்பட்ட செயல்களை தொடர்ந்து அனுமதிக்கிறது.. தடுக்க வேண்டாமா என்று பலரும் கொதிப்புடன் கேட்கின்றனர். இது மெட்ரோ ரயில் நிலையமா அல்லது ஆள் மயக்கும் நிலையமா என்றும் பலர் கேட்டுள்ளனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது சென்னை மெட்ரோ சொர்க்கம். ஒருவர் கூட இந்த ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ அத்துமீற முடியாது. அத்தனை பேரும் மிக மிக பாதுகாப்புடன் குறிப்பாக பெண்கள் தைரியமாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் பயணிக்கும் வகையில் அருமையான முறையில் சென்னை மெட்ரோவின் சேவை சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்லுங்க.. நம்ம ஊரு நம்ம ஊருதான்!
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}