பெங்களூரு: கா்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள லசயான் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்-பூஜா தம்பதியினர். இவர்களது குழந்தை சாத்வீக். இந்த குழந்தை நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த போது 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தையை நெடு நேரம் ஆகியும் காணோம் என்பதால்,குழந்தையின் பெற்றோர்கள் அங்கும் இங்கும் தேடியுள்ளனர். அப்போது, குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கயதை கண்டு குழந்தையின் தந்தை ஆலறி அடித்து ஊர்மக்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்பு பணி தொடங்கிய நிலையில் குழந்தை இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாத்வீக்கின் தாத்தா வீட்டின் அருகில் உள்ள இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை என்பதால், ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளார். கிணற்றில் தண்ணீர் வராத காரணத்தினால் அப்படியே விட்டு விட்டார். விளைநிலத்தின் அருகே தான் வீடு என்பதால், குழந்தை வீட்டின் அருகே விளையாடியுள்ளது. அப்போது தவறுதலாக குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த கர்நாடக அமைச்சர் பாட்டீல் குழந்தையை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கினர். 30 அடி ஆழ கிணற்றில் குழந்தை சுமார் 15 முதல் 20 அடி ஆழத்தில் சிக்கி நிலையில், 5 அடிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பக்கவாட்டில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}