கிருஷ்ணகிரி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - பீலாளம் கிராமத்தில், 300 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின், வருங்கால நகர் திறன் பூங்கா அமையவுள்ள இடத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளாகத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முக்கியமாக சூளகிரி - பீலாளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் வருங்கால நகர் திரன் பூங்கா அமையவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை வழங்கினார்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}