மாஸ்கோவில் டிரோன் மூலம் தாக்குதல்.. உக்ரைன் அதிரடி.. ஏர்போர்ட்டை மூடிய ரஷ்யா

Jul 30, 2023,01:07 PM IST
மாஸ்கோ: உக்ரைன் ராணுவம் அனுப்பிய 3 டிரோன்கள், மாஸ்கோவுக்குள் ஊடுறுவியதால் பரபரப்பு ஏற்பட்டது அந்த டிரோன்களை ரஷ்யப் படையினர் தாக்கி முறியடித்து விட்ட போதிலும் கூட பதட்டம் தொடர்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை ரஷ்யா மூடி விட்டது.

ஒரு டிரோனை வானிலேயே வைத்து தாக்கி தகர்த்து விட்டது ரஷ்யா. மற்ற இரண்டு டிரோன்களையும் ரஷ்ய படையினர் வானிலேயே செயலிழக்க வைத்தனர். அவை அரசு அலுவலகம் ஒன்றின் மீது பறந்து வந்தபோது செயலிழக்க வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.



உக்ரைன்  ரஷ்யா எல்லையிலிருந்து மாஸ்கோ நகரமானது 500 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் அவ்வப்போது உக்ரைன் படையினர் மாஸ்கோவையும் குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் சமீப காலமாக டிரோன் தாக்குதல் முயற்சிகள் அதிகரித்து விட்டன.

புதிய டிரோன் தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை மூட பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. மாஸ்கோ வந்த விமானங்கள் அக்கம் பக்கத்து விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

அதிகம் பார்க்கும் செய்திகள்