டெல்லி: பணிபுரியும் பெண்களுக்கு நாடுமுழுவதும் விடுதிகள் தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்களின் மேம்பாட்டு வளர்ச்சி சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு 2024-25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டை 1 மணி நேரம் 24 நிமிடங்கள் வாசித்து முடித்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு சில முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
* பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். மேலும் அவர்களின் குழந்தைகளுக்காக கிரச் வசதியும் ஏற்படுத்தப்படும். நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்வி கடனாக 10 லட்சம் தரப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய வழிகள் ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}