சென்னை: பொதுத்துறை வங்கிகளில் பங்குகளில் குறிப்பிட்ட சதவீத அளவை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நடவடிக்கையால், வங்கிகளின் செயல்திறன் மற்றும் லாபம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வரும் காலத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் தனியார்த் துறையின் பங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 6 வங்கிகளில் தற்போது 80 சதவீதத்திற்க்கும் மேலான பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இதில், 5 முதல் 10 சதவீத பங்குகளை மட்டும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும், பங்குகளை விற்பதன் மூலம், அரசு நிதி ஆதாரத்தை ஈட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராக பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும், தனியாரிடம் அது போவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}