டெல்லி: பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஸ்ரீ நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. லால் சௌக் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முதற்கட்டமாக, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் மஞ்சுநாத் (கர்நாடகா), வினய் நர்வல் (ஹரியானா), சுபம் திவேதி(உ.பி), சந்திப் (நேபாளம்), உத்வானி பிரதீப் (அமீரகம்), அதுல் ஸ்ரீகாந்த் (மராட்டியம்), சையது உசேன் (காஷ்மீர்), ஹிமத் (சூரத்), ராணுவ அதிகாரி சிவம் மோகா (கர்நாடகா) சஞ்சய், பிரசாத் குமார், மணீஸ் ரஞ்சன், பிடன் அதிகேரி, ராமச்சந்திரம், ஷாலி சந்தர், திலீப் ஜெயராமன் ஆகிய 16 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் ( 31) சென்னை, சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகிய மூன்று பேர் காயமடைந்து அனந்த்னாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் உடல்கள் ஸ்ரீ நகரில் வைக்கப்பட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்.முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!
{{comments.comment}}