சென்னை: டிசம்பர் 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போதை நிலையை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பிற கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகிறார் அமித்ஷா. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை வரும் அமித்ஷா, அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

அதன்பின்னர் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று திடீர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் தமிழக வருகை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
{{comments.comment}}