சென்னை: நடிகை கெளதமி பாஜகவுக்காக உழைத்துள்ளார். அவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர் கூறியுள்ள புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
கெளதமிக்கு ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்பதையும் எல். முருகன் விளக்கியுள்ளார்.
பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகை கெளதமி திடீரென அக்கட்சியை விட்டு விலகியுள்ளார். அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சி. அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது சொத்துக்களை மோசடியாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டு விட்டதாக கெளதமி புகார் கூறியுள்ளார். இந்த மோசடி நபருக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பலர் இருப்பதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தனக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளதாகவும், வேதனையுடன் கட்சியை விட்டு விலகுவதாகவும் கெளதமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெளதமி கொடுத்த புகாரை தற்போது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் உள்பட 6 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் கெளதமி விலகல் குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகை கெளதமி என்ன காரணத்துக்காக விலகியுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்துள்ளார். அவரது பணிகள் அனைத்துமே பாராட்டுக்குரியவையாகும். அவர் என்ன காரணம் கூறியிருந்தாலும் அதுகுறித்து விசாரிக்கப்படும்.
ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியை அவர் கேட்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் கூட்டணிக் கட்சி சார்பில் அது கேட்கப்பட்டதால் கடைசி நேரத்தில் அதை விட்டுக் கொடுக்க நேரிட்டது. இதனால்தான் கெளதமிக்கு சீட் தர முடியாமல் போனது என்றார் எல். முருகன்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் எல். முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}