லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், லாரியுடன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். அதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்பது துயரமானது.
பரேலி என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரைத் திறக்க முடியாமல் அதில் இருந்த 8 பேரும் சிக்கிக் கொண்டு, உயிருடன் கருகி விட்டார்கள்.
இந்தக் கார் நைனிடால் செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி மறு திசையில் போய் விழுந்தது. அங்கு வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்துக் கொண்டது. காரில் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போய் விட்டது.
காரில் சென்ட்ரல் லாக் போடப்பட்டிருந்ததால் காரில் இருந்தவர்களால் அதைத் திறக்க முடியவில்லை. சிறிது நேரத்திலேயே காருக்குள் இருந்த எட்டு பேரும் பரிதாபமாக உயிரோடு கருகிப் பிணமானார்கள்.
காரில் இருந்தவர்கள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவி்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}