மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது 2வது மாடி ஜன்னல் வழியாக, கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து குதித்த கர்ப்பிணிக்கு பலத்த அடி பட்டபோதிலும் கூட அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் நடந்து விடக்கூடிய சாதாரண விஷயம் என்பது கிடையாது. அதிர்ஷ்டம் என்பதே முதலில் அதிசயமானது. திடீரென நிகழக் கூடியது. நிகழும்போது அது கொடுக்கும் பலன்களும், சந்தோஷமும், சர்ப்பிரைஸும், விலை மதிக்க முடியாததாக இருக்கும்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இப்படித்தான் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏன் அந்தப் பெண்ணுக்கே கூட இதை பெரிய சர்ப்பிரைஸ்தான். அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி ரேச்சல் ஸ்டேன்ட்பாஸ்ட் என்பவர் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகளைக் கொண்டதாகும். அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ரேச்சல் என்ன செய்வதென்று அறியாமல் தன் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்காக 2வது மாடியிலிருந்து கிட்டத்தட்ட 20 அடி உயரத்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார்.
இதனால்அவருக்கு பின் தலையில் அடிபட்டது. உடம்பிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்தனர். அவர் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஒரு கர்ப்பிணியாக இல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்து குதித்து இருந்தாலும் உயிர் பிழைப்பது என்பது கஷ்டம். ஆனால் இந்தப் பெண்மணி உயிர் தப்பித்தது மட்டுமல்லாமல் குழந்தையையும் நலமாக பெற்றெடுத்துள்ளார். இது அனைவரையும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
தனது குழந்தைக்கு ப்ரைனெல் ரோஸ் என பெயர் சூட்டி உள்ளார் ரேச்சல்..தாயும், சேயும் சூப்பர் நலமாக உள்ளனராம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}