Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

Jun 24, 2025,05:02 PM IST

வாஷிங்டன்: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஈரான் மீது குண்டு வீச வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.


உங்களது விமானங்களில் பொருத்தியுள்ள குண்டுகளைப் போடாதீர்கள். பைலட்டுகளைத் திரும்பச் சொல்லுங்கள் என்றும் இஸ்ரேலுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போருக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திய சில மணிநேரங்களிலேயே, ஈரான் மேலும் ஒரு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"இஸ்ரேல். அந்தக் குண்டுகளைப் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அது ஒரு பெரிய போர் நிறுத்த மீறல். உங்கள் விமானிகளை இப்போதே வீட்டிற்கு அழைத்து வாருங்கள்! - டொனால்ட் ஜே. டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி," என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர்.. மதுரை மாநாட்டில் விஜய் அதிரடி அறிவிப்பு

news

சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்.. தனித்து வந்தாலும் தைரியமாக வரும்.. விஜய்

news

அதிரும் மதுரை... மக்கள் வெள்ளத்தில் விஜய்.. தொடங்கியது தவெக 2வது மாநில மாநாடு!

news

100 அடி இல்லங்க... 40 அடி உயர கொடி கம்பம்... கொடி ஏற்றுகிறார் தவெக விஜய்!

news

மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

news

மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்

news

Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!

news

12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்